எனது பறவைக் கனவுகள்

  சிறு வயதில் ஒரு அருமையான கனவு எனக்கு அடிக்கடி வந்து கொண்டிருக்கும். கனவில் நான் பறந்து கொண்டிருப்பேன். பறந்தேன் என்று சொல்வதை விட மிதந்தேன் என்பதே சரியாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்தமான கனவு அது. கனவில் என்னால் தரையில் இருந்து எந்த வித உதவியும் இல்லாமல் அப்படியே மேலே எழும்பி மிதக்க முடியும். இறக்கைகள் எதுவும் இருக்காது ஆனாலும் உயரே படிப்படியாக மேலே செல்லவும், தேவைப்படும் போது கீழே வரவும் முடியும். எல்லா கனவுகளைப் […]

இயற்கையை அழித்தா வளர்ச்சி?

Unabridged Tamil version (Translated by P. Jeganathan) of “The long road to growth”  by T. R. Shankar Raman that appeared in The Hindu on 19th March 2015. Abridged version of this article appeared in The Hindu Tamil on 18th April 2015 (see here). கடந்த ஆகஸ்டு 2014 மற்றும் ஜனவரி 2015 நடந்த இரண்டே தேசிய காட்டுயிர் வாரியக் (National […]

நமக்காகவும், சிறுத்தைகளுக்காகவும்..

வால்பாறை பகுதிகளில் சிறுத்தை-மனிதன் எதிர்கொள்ளலை சமாளிக்க/குறைக்க இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தின் (Nature Conservation Foundation) மழைக்காட்டு ஆராய்ச்சி நிலையம் (Rainforest Research Station) பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சிறுத்தை ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், அவை நடமாடுமிடத்தில் பொதுமக்களாகிய நாம் செய்ய வேண்டிய, கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் முதலிய கருத்துக்களை பொதுமக்களுக்கு பல்வேறு வழிகளில் எடுத்துச் சொல்லுதல் போன்றவை இந்த ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகளில் ஒன்று. வால்பாறையின் பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள், தேயிலைத் தோட்ட அதிகாரிகள், பணியாளார்கள், ஆனைமலை புலிகள் […]

குப்பைத் தொட்டியைத் தேடி…

நான் இருப்பது வால்பாறையில். தேயிலைத் தோட்டங்கள் சூழ்ந்த குடியிருப்புப் பகுதியில் வசிக்கிறேன். அந்தத் தோட்டங்களைச் சுற்றிலும் வனப்பகுதி இருப்பதால் வீட்டுக்கு அருகிலும் அவ்வப்போது காட்டு விலங்குகளைக் காண முடியும். வீடென்றிருந்தால் குப்பை சேரத்தான் செய்யும். காய்கறிக் கழிவு, மட்கும் குப்பையைத் தவிர, ஏனைய பிளாஸ்டிக் குப்பைகளை வீட்டிலுள்ள குப்பை டப்பாவில் சேகரித்து, மாதம் ஒருமுறை வால்பாறையில் உள்ள, பெரிய குப்பை கொட்டுமிடத்தில் கொண்டுசேர்ப்பது வழக்கம். வீட்டின் அருகில் வீசியெறிந்தால் காட்டுயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படும், வீட்டைச் சுற்றி பிளாஸ்டிக் […]

மயில் வதம் – தடுக்க என்ன வழி?

சமீபத்திய (21-12-2012) தினசரிகளில் திருச்சி அருகே மயில்களைக் சிலர் கள்ளத்தனமாக வேட்டையாடினர் எனும் செய்தியைப் படித்ததும் அதிர்ச்சியடைந்தேன். வனத்துறையினர் மயில்களைக் கொன்றவர்களை கைது செய்தனர் என்பதை அறிந்த போது நிம்மதி ஏற்பட்டாலும், மறுபுறம் கவலையாகவும், கோபமாகவும் இருந்தது. கொல்லப்பட்டவை 11 மயில்கள். கொன்றவர்கள் யார்? ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆணையர், அவரது மகன், ஒரு முன்னாள் இராணுவ வீரர், இன்னும் ஒருவர். எதற்காகக் கொன்றார்கள்? அவற்றின் கறியை சுவைப்பதற்காக. மயில்களைச் சுடும் போது அது […]

சிட்டுக்குருவிகள் உண்மையிலேயே அழிந்து வருகின்றனவா?

சில ஆண்டுகளாக மார்ச் மாதங்களில் பத்திரிக்கைகளில் அடிக்கடி இடம்பெறும் செய்தி சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன என்பது. அதற்கான முக்கிய காரணங்கள் நகரமயமாதல், செல் போன் டவரிலிருந்து வரும் மின்காந்த அலைகள் என்றும் எனவே அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றெல்லாம் அக்கட்டுரைகளில் சொல்லப்பட்டிருக்கும். இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை? இந்தக் கருத்துக்கள் எல்லாம் அறிவியல் ஆராய்ச்சியின் முடிவில் வெளிவந்த உண்மைகளா? அழிவின் விளிம்பில் இருக்கும் மற்ற பறவைகளைக் காட்டிலும் சிட்டுக்குருவியின் நிலை என்ன அவ்வளவு பரிதாபகரமாக உள்ளதா? இக்கேள்விகளுக்கான […]

என் பக்கத்து வீட்டுப் பழுப்புக் கீச்சான் !

ஒவ்வொறு முறையும் பகலில் எனது வீட்டிலிருந்து வெளியே போகும் போது என்னையறியாமல் தலையைத் திருப்பி வழியில் உள்ள அந்த மரத்தை எனது கண்கள் நோட்டமிடும். சுமார் 10 அடி உயரமே இருக்கும் அந்த மரத்தின் கீழ்க் கிளையை நோக்கியே எனது பார்வை இருக்கும். நான் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பது பழுப்புப் கீச்சானை (Brown Shrike Lanius cristatus). இங்கு தென்படும் மற்ற பறவைகளை ஒப்பிட்டால் அது அப்படி ஒன்றும் விசித்திரமானதோ, கொள்ளைகொள்ளும் அழகு வாய்ந்ததோ, ரம்யமான குரலைக்கொண்டதோ இல்லை. ஆனாலும் […]

இடைவெளியும் இடையூறும்

அண்ணாந்து பார்த்துக் கிடந்தது அந்த அணில், சாலையின் நடுவில். அது சாதாரண அணில் அல்ல, மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரில் வாழும் மலையணில். வண்டியை விட்டு இறங்கி அருகில் சென்று பார்த்தபோது அதன் முகத்திலிருந்து இன்னமும் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது, வயிற்றின் உள்ளிருந்து குடல் பகுதி வெளியே வந்து கிடந்தது. சாலையைக் கடக்கும் போது ஏதோ ஒரு வாகனத்தில் அடிபட்டு பரிதாபமாக இறந்து போய், அதன் வெண்மஞ்சளான அடிப்பாகம் தெரிய வானத்தைப் பார்த்து அண்ணாந்து கிடந்தது அந்த மலையணில். […]