நமக்காகவும், சிறுத்தைகளுக்காகவும்..

வால்பாறை பகுதிகளில் சிறுத்தை-மனிதன் எதிர்கொள்ளலை சமாளிக்க/குறைக்க இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தின் (Nature Conservation Foundation) மழைக்காட்டு ஆராய்ச்சி நிலையம் (Rainforest Research Station) பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சிறுத்தை ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், அவை நடமாடுமிடத்தில் பொதுமக்களாகிய நாம் செய்ய வேண்டிய, கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் முதலிய கருத்துக்களை பொதுமக்களுக்கு பல்வேறு வழிகளில் எடுத்துச் சொல்லுதல் போன்றவை இந்த ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகளில் ஒன்று.

Photo: Kalyan Varma
Photo: Kalyan Varma

வால்பாறையின் பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள், தேயிலைத் தோட்ட அதிகாரிகள், பணியாளார்கள், ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள், வனத்துறை ஊழியர்கள், ஏனைய அரசு அதிகாரிகள், மாணவர்கள், சுய உதவிக்குழுவினர், சுற்றுலாவினர் ஆகியோருக்கு, மனித-காட்டுயிர் எதிர்கொள்ளலைப் பற்றிய பொதுக்கூட்டங்கள், பயிலரங்கு மூலமாகவும், பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் விளக்கக் கட்டுரைகள் எழுதியும் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கைகள் யாவையும் ஆனைமலைப புலிகள் காப்பகத்தின் (Anamalai Tiger Reserve) தமிழ்நாடு வனத்துறை (Tamil Nadu Forest Department)அதிகாரிகளின் உதவியுடனும், இணைந்தும் செயல்படுத்தப்படுகிறது.

மேலும், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் ஓர் அங்கமான வால்பாறையில் அமைந்துள்ள “காட்டுயிர் மேலாண்மை மற்றும் மீட்பு மையத்திலுள்ள (Animal Disaster Management and Rescue Centre) மனித-காட்டுயிர் மீட்பு-தடுப்புக் குழுவினர் (Anti-Depredation Squad) மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு மனித-காட்டுயிர் எதிர்கொள்ளலை சமாளிக்கும்/குறைக்கும் களப்பணியில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வனத்துறை, ஏனைய அரசுத் துறை அதிகாரிகள், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் பிரதிநிதிகளைக் கொண்ட தன்னாட்சி அமைப்பான ஆனைமலை புலிகள் பாதுகாப்பு நிறுவனமும் (Anamalai Tiger Conservation Foundation), கானுயிர் பாதுகாப்பு கழகமும் (Wildlife Conservation Society), சஞ்சய் காந்தி தேசியபூங்காவின் மும்பை ஆர்வலர்கள் குழுவும் (Mumbaikars for SGNP) இணைந்து சிறுத்தை-மனிதன் எதிர்கொள்ளலைப் பற்றிய விளக்கச் சுவரிதழ்களைத் (poster) தயாரித்துள்ளது. இச்சுவரிதழ்கள் வால்பாறை பகுதிகளில் உள்ள அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும், தமிழிலும் தயாரிக்கப்பட்ட இந்தச் சுவரிதழ்களின் படங்களைக் கீழே காணலாம். இவற்றின் உயர் பிரிதிற வடிவத்தை (High Resolution) உங்களைப் பதிவுசெய்து கொண்டு இலவசமாகப் பெறலாம்.

Leopard poster_English_A2_700

சுவரிதழ் ஆங்கிலத்தில்: அளவு – A2. PDF இங்கே.

Leopard poster_Tamil_A2_700

சுவரிதழ் தமிழில்: அளவு – A2. PDF இங்கே.

Leopard_Rural_Poster_Tamil_700

சுவரிதழ் தமிழில் – அளவு – A3. PDF இங்கே.