என் பக்கத்து வீட்டுப் பழுப்புக் கீச்சான் !

ஒவ்வொறு முறையும் பகலில் எனது வீட்டிலிருந்து வெளியே போகும் போது என்னையறியாமல் தலையைத் திருப்பி வழியில் உள்ள அந்த மரத்தை எனது கண்கள் நோட்டமிடும். சுமார் 10 அடி உயரமே இருக்கும் அந்த மரத்தின் கீழ்க் கிளையை நோக்கியே எனது பார்வை இருக்கும். நான் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பது பழுப்புப் கீச்சானை (Brown Shrike Lanius cristatus). இங்கு தென்படும் மற்ற பறவைகளை ஒப்பிட்டால் அது அப்படி ஒன்றும் விசித்திரமானதோ, கொள்ளைகொள்ளும் அழகு வாய்ந்ததோ, ரம்யமான குரலைக்கொண்டதோ இல்லை. ஆனாலும் […]